நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் திருமணம் செய்து கொண்ட தகவல் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, சித்தார்த் நடிக்கும் புதிய படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். காவல்துறை அதிகாரியாக உள்ள ஹீரோவின் துப்பாக்கி காணாமல் போக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி பல கொலைகள் தொடர்ந்து நடக்கிறது.
இறுதியில் அந்த குற்றவாளியை ஹீரோ பிடித்தாரா? தனது துப்பாக்கியை மீட்டாரா? என்பதை மிக விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் ஒரு பக்கா திரில்லர் படமாக கொடுத்திருந்தார் ஸ்ரீ கணேஷ்.
இந்த படத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரை அனைவரும் ‘8 தோட்டாக்கள்’ படத்தையும் எம்.எஸ்.பாஸ்கரையும் பாராட்டிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக வெளியான ‘குருதி ஆட்டம்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக நடிகர் சித்தார்த்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
‘சித்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சித்தார்த் நடிக்கும் புதிய படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஸ்ரீ கணேஷ் இயக்க இருக்கும் இந்த படத்தை சித்தார்த்தின் ஏக்தா என்டர்டெயின்மெண்ட் (Ekta Entertainment) நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வருமான வரித்துறைக்கு எதிராக… நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!
மதுபான வழக்கு: மேலும் ஒரு ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிக்கல்!
முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்!