மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 6) வெளியிடப்பட்டுள்ளது.
மதிமுக தேர்தல் அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மதிமுகவின் சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில், “24 உரிமை முழக்கம்” என்ற தலைப்பில் மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று திருச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில் 74 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில் முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
- ஜிஎஸ்டி வரி நீக்கம்
- பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
- சிறுபான்மையினர் நலம் காக்கப்படும்
- சிஏஏ சட்டம் வாபஸ் பெறப்படும்
- ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தரத் தடை
- கச்சத்தீவு மீட்க நடவடிக்கை
- தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்படும்
- சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு
- முன்னேறிய சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு திரும்பப்பெற வலியுறுத்தப்படும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
- மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்
- 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன், ஊதியமும் ரூ.600 ஆக உயர்த்தப்படும்
- வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்
- விவசாயி கடன் ரத்து; விளை பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படும்
- கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்படும்
- இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்
- பாஜக அரசால் நிறைவேற்றிய ஜனநாயக விரோத சட்டங்கள் ரத்து செய்ய நடவடிக்கை
- அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை தாய் மொழியில் எழுத நடவடிக்கை
- இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பை எதிர்ப்போம்
- சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் தேவரகொண்டாவின் ‘தி பேமிலி ஸ்டார்’ எப்படி இருக்கிறது?- திரை விமர்சனம்!
மாநிலங்களை பாளையக்காரர்களாக மாற்றும் பாஜக: ப.சிதம்பரம் தாக்கு!