இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு உணவுகளில் சோடியம் அதிகம் இருப்பது, மரபியல் காரணங்கள், சமூக மற்றும் பொருளாதார காரணங்கள், வாழ்க்கைமுறை, வேலைப்பளு, தூக்கமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
இந்தநிலையில் தங்களது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் ஆரோக்கியம் – 2௦24 என்ற அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவர்களில் நான்கில் மூவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் மூவரில் இருவருக்கு உயர் ரத்த அழுத்தமும், ஒருவருக்கு சக்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பது கண்டறியப்பட்டது. எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவர்களில், நான்கில் ஒருவருக்கு தூக்க தடை பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்… : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்த ஸ்டாலின்
மதிமுக, சிபிஎம் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
தேர்தல் நேரத்தில் ரம்ஜானுக்கு மட்டும் அனுமதியா? அதிர்ச்சிக்குள்ளாக்கிய நீதிபதியின் கேள்வி