காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ படங்களை தயாரித்த இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி, பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “மாஸ்க்”.
இத்திரைப்படத்தை வி.கர்ணன் அசோக் இயக்குகிறார்.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
மாஸ்க் படத்திற்கு ஜி.பி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும், ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
மே 17 அன்று மாஸ்க் திரைப்படத்தின் அறிவிப்புடன் பூஜை நடைபெற்றது. கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!
Thailand Open 2024: அசத்தும் சாத்விக், சிராக், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டா
டாப் 10 செய்திகள் : மோடி ராகுல் பிரச்சாரம் முதல் ஐபிஎல் அப்டேட் வரை!