இந்த ஆண்டு (2022 ) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிளிப் டிவிக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 10 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆராய்ச்சிக்காக அவர்கள் மூவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
சீனியர்களுக்கு பயப்படுகிறாரா ஸ்டாலின்?: திமுக அதிமுக மோதல்!