இந்த ஆண்டு (2022 ) அமைதிக்கான நோபல் பரிசு அலஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் , பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி உள்ளிட்டோருக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 7 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டி மற்றும் ரஷிய மனித உரிமை அமைப்பான மெமோரியல் ஆகிய அமைப்புகளுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காக அலஸ் பியாலியாட்ஸ்கி மற்றும் உக்ரைன், ரஷிய மனித உரிமை அமைப்புகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சுருக்கு வலைக்கு தடை:மீனவர்கள் போராட்டம்!
கஞ்சா வழக்கில் கைதான இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு… ஜோ பைடன் அதிரடி!