இந்த ஆண்டு (2022 ) இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் , பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 6 ) நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை தனது படைப்பில் வலியுறுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளையும், அதன்பின்னர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆன்லைன் ரம்மி: ரயில் முன் பாய்ந்த வாலிபர் !
போலி பாலியல் புகார்: 10 ஆண்டு சிறை ரத்து!