அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி!

Published On:

| By Selvam

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ”1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசிய உரைக்கு முத்துராமலிங்க தேவர் மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அவரது பேச்சு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளதால் அண்ணாமலை மீது IPC 153A, & B (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், அண்ணாமலை மீது IPC 153A, & B (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு என் மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில், கடந்த காலத்தில் நடந்த நிகழ்வை பேசியதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்ய மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு கட்சியில் முக்கியமான பதவிகளை வழங்குவது திமுகவின் உண்மையான முகத்தை காட்டுகிறது.

1956-ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் பேசியதை மக்களின் நினைவுகளில் இருந்து அழிக்க முயற்சி செய்ததை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த செய்ததற்கு திமுகவுக்கு நன்றி.

திமுக அரசுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள் உங்களால் என்னை தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்னும் எத்தனை நாளைக்கு தாண்டா உருட்ட போறீங்க – அப்டேட் குமாரு

கலைஞரின் கனவுத் திட்டம்… கடைசி தடையை உடைத்த அமைச்சர் அனிதா- நெல்லை, தூத்துக்குடி மக்கள் நிம்மதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel