கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!

தமிழகம்

சென்னையில் வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது காரை எற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக்நகர் 10-வது தெருவில் வசித்துவரும் சரிதா என்பவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக அவரது உறவினர்கள் பலர் வந்திருந்தனர்.

வீட்டில் போதிய இடம் இல்லாததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் வீட்டின் வாசலில் படுத்து உறங்கினர். இன்று (மே 11) அதிகாலை 4 மணியளவில், அந்த வழியாக வந்த மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கார், வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த உறவினர்களின் கால்களின் மீது ஏறி நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து, காரை ஓட்டி வந்த வடமாநில பெண்ணை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிராவை சேர்ந்த 41வயதான வைஷாலி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.

சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ள வைஷாலி, கூகுள் மேப் காட்டிய பாதையில் காரை ஓட்டியதாகவும், அது குறுகலான பாதை என்பது அவருக்கு தெரியாது எனவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அம்மாவுடனான கடைசி நிமிஷம் – சட்டென உடைந்த சாந்தி வில்லியம்ஸ்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *