இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று(அக்டோபர் 3) மருத்துவ விருதுடன் தொடங்கியது.
2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெனிசோவா என்ற முன்னர் அறியப்படாத ஹோமினினையையும், 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து தற்போது அழிந்து வரும் ஹோமினின்களிலிருந்து ஹோமோ சேபியன்களுக்கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் பாபோ கண்டறிந்துள்ளார்.
இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கலை.ரா
உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!
ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு!