இந்த ஆண்டு (2022) வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் கரோலின் ஆர்.பெர்டோசி, டென் மார்க்கின் மார்டென் மெல்டால்,அமெரிக்காவின் பேரி ஷார்ப்லெஸ் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக இன்று (அக்டோபர் 5 ) அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரியக்கவியல் மூலக்கூறு மற்றும் செல்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
விஞ்ஞானி பேரி ஷார்ப்லெஸ் கடந்த 2001 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளை (அக்டோபர் 6 ) ஆம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு நாளை மறுநாள் அறிவிக்கப்படவுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நல்ல நேரம் பார்த்து தேசிய கட்சி தொடங்கிய கேசிஆர்