அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா: முதல்வர் ஸ்டாலின்
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு வெற்றி விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி : விஜயபாஸ்கர்