சென்னையில் இன்று ஸ்பேஸ் ஸ்டேஷனை பார்க்கலாம்… மாஸான அப்டேட் கொடுத்த நாசா!

டிரெண்டிங்

சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்னையில் வசிப்பவர்கள் இன்று (மே 10) இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமியில் இருந்து 500 கி.மீ உயரத்தில் பூமியை சுற்றி வரும் பெரிய விண்கலமாகும். இது விமானம் அல்லது வானத்தின் குறுக்கே நகரும் பிரகாசமான நட்சத்திரம் போல தெரியும். இது விமானத்தை விட வேகமாக நகரும்.

அதாவது விமானமானது மணிக்கு 600 மைல் வேகத்தில் செல்லும், விண்வெளி நிலையம் 17,500 மைல் வேகத்தில் செல்லும்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நாசா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கியுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான செயல்பாடுகள், தகவல் தொடர்பு, ஏவுகணைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது.

இந்தநிலையில், விண்வெளி நிலையத்தை சென்னையில் வசிப்பவர்கள் இன்று இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிடங்கள்… அதாவது 7.16 வரை வெறும் கண்களால் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.

பொதுவாக சூரியன் உதிப்பது அல்லது மறைவதற்கு சில நிமிடங்கள் முன்பாகவோ, பின்பாகவோ விண்வெளி நிலையத்தை காணலாம். அந்தவகையில், சென்னையில் இன்று இரவு 7.09 மணிக்கு விண்வெளி நிலையத்தைக் காணலாம். நாசா வெளியிட்ட இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிர்ச்சி திருதியை ஆன அட்சய திருதியை: ஹாட்ரிக் அடித்த தங்கம் விலை!

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… இந்தியா கூட்டணிக்கு பலம்… மம்தா நம்பிக்கை!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *