IPL 2024 Playoffs Race

MI, PBKS அணிகள் நாக்-அவுட்: பிற அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு என்ன?

விளையாட்டு

IPL 2024: 2024 ஐபிஎல் தொடரில் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. 58 லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் அந்த டாப் 4 இடங்களில் ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

இப்படியான சூழலில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக MI அணி நாக்-அவுட் ஆனது.

இதை தொடர்ந்து, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அந்த அணியும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து நாக்-அவுட் ஆனது. இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எந்த அணிக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு பார்ப்போம்.

KKR vs RR Playing 11 IPL 2024: Kolkata Knight Riders vs Rajasthan Royals Team News, Predicted Lineup - myKhel

KKR, RR அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 16 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள், கிட்டத்தட்ட 99% தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. தற்போது உள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றாலும் கூட, அவர்களின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

SRH vs CSK Head To Head Stats, Results & Record in Rajiv Gandhi Stadium, Hyderabad Ahead of IPL 2024 Match 18 - myKhel

SRH, CSK அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

இவர்களை தொடர்ந்து, 14 மற்றும் 12 புள்ளிகளுடன் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில் உள்ளது. ஒருவேளை, இந்த அணிகள் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, ரன்-ரேட் ஆகியவற்றின் அடிப்படையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளது.

Lucknow Super Giants vs Delhi Capitals IPL 2024 preview, head-to-head record and predicted playing XIs – India TV

LSG, DC அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

அடுத்தபடியாக, தலா 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது, 6வது இடத்தில் உள்ள டெல்லி, லக்னோ அணிகள், பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் 2 போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்த 2 அணிகளும் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், இந்த தொடரின் 64வது லீக் போட்டியில், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB vs GT: Revealed - Who are the impact players nominated by RCB and GT for match 52 of IPL 2024

RCB, GT அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், இன்னும் அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ள பெங்களூரு, குஜராத் அணிகள், முதலில் தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

பின், ஐதராபாத் அணி தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதேபோல, சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஒன்றுக்கும் அதிகமான வெற்றியை பெறக்கூடாது.

இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில், இன்னும் சில போட்டிகளே மீதமுள்ள நிலையில், 8 அணிகள் இன்னும் பிளே-ஆஃப் ரேஸில் உள்ளதால், இந்த தொடர் கூடுதல் சுவாரஸ்யம் பெற்றுள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

10-ம் வகுப்பு ரிசல்ட் : மாணவர்களை முந்திய மாணவிகள்… தேர்ச்சி சதவீதம் என்ன?

அட்சய திருதியை எதிரொலி : ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *