3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 386 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியிலேயே இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றியைப் பதிவு செய்தது.
தொடர்ந்து ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியிலும் அசத்தலான பேட்டிங் மற்றும் அதிரடியான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்று ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.
இதனையடுத்து 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 24) இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கியது.
கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை வைட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியாவும், இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றி பெறும் முயற்சியில் நியூசிலாந்து அணியும் களமிறங்கின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்யத் தயாராகியது.
இந்திய அணியின் தொடக்கமே அதிரடியாகவும் சாதனையாகவும் அமைந்துவிட்டது. காரணம் தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து சதம் அடித்தனர்.

ரோகித் 83வது பந்தில் 100 ரன்களும், கில் 72வது பந்தில் 103 ரன்களும் அடித்தனர். சதம் அடித்தவுடன் 101 ரன்களில் ரோகித் ஆட்டமிழக்க விராட் கோலி, சுப்மன் கில் உடன் இணைந்தார்.

விராட் கோலி 36 ரன்களும், இஷான் கிஷன் 17 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 14 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் இந்திய அணி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தது.
ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 25 ரன்களும், குல்திப் யாதவ் 3 ரன்களும், உம்ரன் மாலிக் 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
நியூசிலாந்து அணியில், அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி மற்றும் பிளேர் டிக்னர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை குவித்தது
இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 386 ரன்கள் இலக்கை நோக்கி ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கை உடன் களமிறங்கியுள்ளது நியூசிலாந்து.
மோனிஷா
நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கிய ’ரோகித் – கில்’ : அபார சாதனை!