ஐபிஎல் : சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி!

விளையாட்டு

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியான தோல்விகளின் காரணமாக தொடரின் பாதியில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இதையடுத்து தோனி மீண்டும் அணியின் கேப்டனாக தொடர்ந்தார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த ஆண்டு குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை வந்துள்ள தோனி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இன்று மார்ச்(17) மாலை தோனி பயிற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், சேப்பாக்கம் மைதானம் முன்பு தோனியை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூடியுள்ளனர்.

கடந்த ஆண்டு அகமதாபாத்தில் ஐபிஎல் கோப்பையை வென்ற தோனி என்னுடைய கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இருக்கும் என அறிவித்திருந்தார்.

இதனால் இந்த ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“ஊ சொல்றியா” பாடல் முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன் – சமந்தா

டிஜிட்டல் திண்ணை:ராமதாஸ் சென்டிமென்ட் பேச்சு… கண் கலங்கிய அன்புமணி… தைலாபுரம் செல்லும் எடப்பாடி… கூட்டணி க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0