தமிழகத்தில் 2023-24 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 2023-24 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 8,18,743 என 91.55% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மாணவர்கள் 3,96,152 பேர் என 88.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேவேளையில் மாணவிகள் 4,22,591 பேர் என 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்மூலம் இந்தாண்டும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ஆம் பொதுத்தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in , http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அட்சய திருதியை எதிரொலி : ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!