விடுதலை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் சூரி விடுதலை 2, பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
சமீபத்தில் துரை செந்தில் குமார் – சூரி கூட்டணியில் உருவாகியுள்ள கருடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் Glimpse வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சசிகுமார், உன்னிமுகுந்தன், சமுத்திரகனி, ரேவதி ஷர்மா, ரோஹிணி ஹரிப்ரியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் வெற்றி மாறன் கதை எழுதியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபில்ம் கம்பெனி ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.
Get ready for an epic journey as #Garudan soars into theaters this May! 🦅 #GarudanFromMay
Starring: @sooriofficial @SasikumarDir @Iamunnimukundan
Written and Directed by @Dir_dsk
An @thisisysr musical#VetriMaaran @RevathySharma2 @SshivadaOffcl @Roshni_offl @thondankani… pic.twitter.com/dtrG8BkLNX— Actor Soori (@sooriofficial) May 10, 2024
இந்நிலையில் தற்போது கருடன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இந்த மே மாதம் கருடன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகிய இருவருக்கும் ஒரு விசுவாசமான அடியாளாக நடிகர் சூரி நடித்திருக்கிறார். ஆக்சன் டிராமா கதைகளத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.
சூரியின் கருடன் திரைப்படத்தை 5 ஸ்டார் நிறுவனம் சார்பில் கே.செந்தில் ரிலீஸ் செய்கிறார்.
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகும் கருடன் படமும் மிக பெரிய வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்க தட்டு வடை விற்பனை: அதிகாரிகள் ஆய்வு – அடுத்து என்ன நடந்தது?
விபத்தில் சிக்கிய டாடா ஏஸ் – சிதறிய ரூ.7 கோடி – வீடியோ வைரல்!