டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (மே 10) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும் ஜாமீன் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் கெஜ்ரிவால்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் நடைபெற்று வந்தது.
தேர்தல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அமலாக்கத்துறை நேற்று புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இன்று கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம் இதோ!
சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!