மாவீரன், அயலான் என தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் அமரன்.
இது நடிகர் சிவாவின் 21 வது படம். ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தான் அமரன் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 24 வது படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. சமீபத்தில் இந்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் டான் படம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் SK 24 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார் என்றும் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் சிபி மிக பிஸியாக இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் SK 24 படத்தை Passion studio நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும், நடிகை ரஷ்மிகா மந்தனா சிவாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
டாப் 10 செய்திகள்: கெஜ்ரிவால் போராட்டம் முதல் வானிலை அப்டேட் வரை!
பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு தயாரான சூர்யாவின் கங்குவா.. ரிலீஸ் தேதி இதுவா..?
பியூட்டி டிப்ஸ்: அலுவலகத்துக்கு ஏற்ற ஆடை எது தெரியுமா?