சந்திக்க தயாரா? : மாணவர்களுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்!

Published On:

| By christopher

Ready to meet students : Vijay's special update!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களை சந்திப்பதாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அறிவித்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அவரது அரசியல் கட்சியை அறிவித்தார் விஜய். தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசியல் அறிவிப்பை அடுத்து விஜயின் சிறு சிறு அசைவுகளும் மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களை கெளரவிக்க முடிவு செய்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும்  வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகமடைய செய்யும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.. மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள்..

அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களையும், மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

10ஆம் வகுப்பில் சதம் : முதலிடத்தில் கணிதம்… கடைசியில் தமிழ்!

அக்சய்குமாருக்கு எதிராக வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel