ஜப்பானுக்கு ரூ.489 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பானுக்கு அதன் அண்டை நாடுகளான சீனா, வடகொரியா போன்றவற்றிடம் இருந்து அவ்வப்போது அச்சுறுத்தல் ஏற்படுவதைச் சமாளிக்க நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உதவியை ஜப்பான் அரசாங்கம் கோரியது.
எனவே ஜப்பானுக்கு ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அதன்படி சுமார் ரூ.489 கோடி மதிப்பிலான சைட் விண்டர் ஏவுகணை உள்பட பல்வேறு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
கொம்பன் தென் மாவட்டத்துல எறங்கிட்டான் மாமா: அப்டேட் குமாரு
ஒரே பாரதம் உன்னத பாரதத்திற்கு காசி தமிழ் சங்கமம் வலு சேர்க்கிறது: பிரதமர் மோடி