அடுத்த படத்தின் இரட்டை இயக்குநர்களை வாழ்த்திய கமல்

Published On:

| By Kavi

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் KH233, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் (KH234) ஆகிய படங்களில் கமல் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் கமல் மணி ரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க தொடங்கி விட்டார்.

அதனை தொடர்ந்து கமலின் 237 வது படம் இரட்டை ஸ்டண்ட் இயக்குநர்கள் ஆன அன்பறிவ் இயக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

விக்ரம், லியோ, கே ஜி எப், சலார் போன்ற பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக பணியாற்றியவர்கள் இரட்டை சகோதரர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி).

இவர்கள் தற்போது மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கும் ஸ்டண்ட் இயக்குநர்கள் ஆக பணியாற்றுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்பறிவ் இயக்கம் KH 237 படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இன்று (மே 11) இரட்டை சகோதரர்களான அன்பறிவ் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல் அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இதுவரை அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றிய முக்கியமான சில படங்களின் சின்ன சின்ன காட்சிகளை இணைத்து இறுதியில் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் கமல் ஹாசனும் தனது எக்ஸ் பக்கத்தில் இவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “திறமையாலும், அர்ப்பணிப்பாலும் உங்களையும் என்னையும் கவர்ந்த அன்புத் தம்பிகளுக்கு அன்பறிவ் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டு அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

KH 237 படத்தில் கமிட் ஆவதற்கு முன்பே அன்பறிவ் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

தங்க தட்டு வடை விற்பனை: அதிகாரிகள் ஆய்வு – அடுத்து என்ன நடந்தது?

விபத்தில் சிக்கிய டாடா ஏஸ் – சிதறிய ரூ.7 கோடி – வீடியோ வைரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel