அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், நம் வாழ்க்கையில் செல்வமும் செழிப்பும் பெருகும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியை திதியே அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டின் அட்சய திருதியை இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு துவங்கி நாளை அதிகாலை 2.15 மணிக்கு நிறைவடைகிறது. இந்தநிலையில், இன்று காலை முதலே பொதுமக்கள் நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் வாங்கி வருகிறார்கள்.
அட்சய திருதியை முன்னிட்டு இன்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில், மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… இந்தியா கூட்டணிக்கு பலம்… மம்தா நம்பிக்கை!
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை; நீதிமன்றத்தில் நடந்தது என்ன?