சென்னை வெயில்: பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு!

தமிழகம்

சென்னையில் இன்று முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அக்னிநட்சத்திரம் முடிந்த பிறகும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. தினமும் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் சென்னையில் இன்று முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னையின் இன்றுடன் வெயிலின் தாக்கம் குறையும். இனிமேல் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை பதிவாகாது. நாளை முதல் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளா, காவிரி நீர்பிடிப்பு, வால்பாறை, நீலகிரி, கர்நாடகா, கோவா ஆகிய பகுதிகளில் தீவிரமான பருவமழை ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சி: மதிய சாப்பாடு என்ன தெரியுமா?

பொம்மை: விமர்சனம்!

+1
1
+1
2
+1
2
+1
7
+1
3
+1
5
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *