சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 23) சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.47 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 அதிகரித்து ரூ.5,875-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள வேளையில் வெள்ளி விலை குறைந்து விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.80,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.80.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
பள்ளி மாணவிகளிடம் காவல்நிலையத்தில் விசாரணை: ஆவேசமான ரஞ்சனா நாச்சியார்