விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
மத்தியகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. குமரி பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரூவாரூரில் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
அதே போல் புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் குலோத்துங்கன் இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஜவாஹிருல்லா கோரிக்கை!
பியூட்டி டிப்ஸ்: ‘ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ – உடலில் ஏற்படும் தழும்புகளை நீக்க முடியுமா?