கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்ட பணத்தை எதிர்வரும் தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “இந்த ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
அதனடிப்படையில்,1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடியை விடுவித்து அறிவிப்பு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள இந்த தொகையினை தஞ்சாவூர் மாவட்டத்தில் தகுதியுள்ள கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்தத் தொகையை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!
பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம்? அதானி சர்ச்சையில் அடுத்த கட்டம்!