அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் முன் வைத்து வந்த நிலையில், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்’ என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜூலை 12ஆம் தேதி அமலாக்கத் துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்துக்குச் செந்தில் பாலாஜி தரப்பில் இன்று காலை 10.30 மணி முதல் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன்வைத்து வருகிறார்.
அமலாக்கத் துறை சட்டம், ஃபெரா சட்டம், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் எனச் சட்ட நுணுக்கங்களை முன்வைத்து வாதாடிய கபில் சிபல், ஒரு கட்டத்தில் நேற்று தான் மருத்துவச் சிகிச்சைக்குச் சென்று வந்ததாகவும், தற்போது வலி ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்கு நீதிபதி, இது பள்ளியோ, கல்லூரியோ கிடையாது. சிறிது நேரம் ஓய்வெடுத்து வாதாடுங்கள். உங்களுக்கு வாய் வலிக்கும் என்று கூறி வழக்கைச் சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
இதையடுத்து சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை மீண்டும் 12.15 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரியா
திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முழு விவரம்!
எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது : நீதிமன்றம்!