How to Remove scars from body?

பியூட்டி டிப்ஸ்: ‘ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ – உடலில் ஏற்படும் தழும்புகளை நீக்க முடியுமா?

டிரெண்டிங்

ஆண் – பெண் இரு பாலினருக்குமே உடலின் சில பகுதிகளில் ‘ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்’ (Stretch Marks) என சொல்லப்படக்கூடிய தழும்புகள் இருக்கும். எல்லோருக்குமே இருக்கும் என்றில்லை, கணிசமான பேருக்கு இந்தத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். எதன் காரணமாக இவை ஏற்படுகின்றன, அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் முன் கூட்டியே தடுக்கும் வழிமுறைகள் உண்டா? How to Remove scars from body?

“பல்வேறு காரணங்களால் தோல் விரிவடைவதன் காரணமாக ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படும். சருமத்தில் ஏற்படும் இந்த வகை தழும்புகளை `ஸ்ட்ரை டிஸ்டென்சே’ (Striae Distensae) என்று சொல்வோம்.

ஆண், பெண் இரு பாலினருமே பருவமெய்தும்போது உடல் எடை கூடி வளர்வார்கள். அப்போது பெண் குழந்தைகளுக்குத் தொடைப் பகுதிகளிலும், ஆண் குழந்தைகளுக்கு முதுகுப்பகுதியிலும் இந்தத் தழும்புகள் ஏற்படலாம். கர்ப்பம் தரித்த பிறகு அதிகமாக உடல் எடை கூடுவதாலும், அதிக எடையுள்ள குழந்தையை சுமப்பதாலும் வயிறு நன்றாகவே பெருத்து விடும். அவர்களுக்கு இந்தத் தழும்புகள் ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி செய்கிறவர்களில் பெரும்பாலானோர் மார்பு மற்றும் தோள்பட்டைக்குத் தான் அதிக வேலை கொடுக்கின்றனர். ஆகவே, அவை இரண்டுக்கும் இடைப்பட்ட தோல் அதிகம் விரிவடைவதன் காரணமாகவும் இந்தத் தழும்பு ஏற்படுவதைக் காணலாம். அதிவேகமாக உடல் பருமனாவது அல்லது உடல் எடையைக் குறைப்பது ஆகியவற்றாலும் இந்தத் தழும்புகள் ஏற்படும். உடலில் சில ஹார்மோன் மாற்றங்களின் விளைவு, அளவுக்கதிகமாக ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்வது ஆகியவற்றை தழும்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூற முடியும்.

ஸ்டீராய்டு கலந்து மருந்தை சருமத்துக்குப் பயன்படுத்தும்போது அதன் விளைவாக சிலருக்குத் தழும்புகள் ஏற்படும். தழும்புகளைப் போக்க பல வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அவை அந்தத் தழும்பின் தன்மையையும் நபரையும் பொறுத்து மாறுபடும். எல்லோருக்குமே எல்லாமும் பொருந்தாது. பிரசவத்துக்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் தழும்புகளை எடுத்துக் கொள்வோம்.

How to Remove scars from body?

முதலில் அந்தத் தழும்புகள் சிவப்பாக இருக்கும். அதை `ஸ்ட்ரை ரூப்ரா’ (Striae Rubra) என்று சொல்வோம். அந்த நிலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அந்தத் தழும்பைப் போக்க முடியும். அதை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் அந்தத் தழும்புகள் வெள்ளை நிறத்தில் மாறிவிடும். `ஸ்ட்ரை ஆல்பா’ (Steria Alba) என்கிற அந்த நிலையில் அந்தத் தழும்புகளைப் போக்க அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். க்ரீம்கள் உதவாதபோது லேசர் சிகிச்சை வரை தேவைப்படலாம்.

தோலின் உட்புறத்தில் இருக்கும் கொலாஜன், வயதாகும்போது சேதமடையும். இதன் விளைவாகத்தான் முதுமைக்காலத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் இதுதான் நடக்கிறது. தோல் விரிவடைவதன் காரணமாக உள் தோலில் ஏற்படும் பிரச்சினை தான் வெளியே நமக்கு தழும்பாகத் தெரிகிறது. ஊசி வழியாக உள் தோலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தத் தழும்புகளைப் போக்க முடியும்.

பல்வேறு காரணங்களால் தழும்புகள் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதன் வழியே முற்றிலுமாக இதைத் தடுக்க இயலாது. இருந்தும் இது சார்ந்த விழிப்புணர்வு இருந்தால் பெரும்பகுதி இதைத் தடுக்க இயலும்.

How to Remove scars from body?

கர்ப்பமாக இருக்கும்போது வயிறு சராசரி அளவுக்கும் கூடுதலாகப் பெருத்திருந்தால் மாய்ஸ்ச்சரைஸர், தேங்காய் எண்ணெய், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் நிவாரண க்ரீம்கள் என விரிவடையும் சருமத்துக்கு மீள்தன்மை கொடுப்பவற்றை தடவி மசாஜ் செய்யலாம். பலன் கிடைக்கும். பிரசவத்துக்குப் பிறகு சருமம் மீண்டும் சுருங்கிவரும் நாள்களிலும் இதைப் பின்பற்ற வேண்டும்.

உடல் எடை கூடுதல் அல்லது குறைதல் ஆகிய இரண்டுமே படிப்படியாகத்தான் நிகழ வேண்டுமே தவிர, அதி வேகமாக நிகழக் கூடாது. உடல் எடையைக் கூட்ட அல்லது குறைக்க முற்படுகிறவர்கள் இதன் விளைவாக தோல் சார்ந்து ஏதேனும் பிரச்னை வருமா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாத்திரைகளின் பக்க விளைவுகள், தைராய்டு பிரச்சினை ஆகியவற்றால் நம்மையும் அறியாமல் உடல் எடை கூடுகிறது என்றால் என்ன செய்வது எனக் கேட்கலாம். நமது உடலில் நிகழும் மாற்றங்களை நாம் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தழும்புகள் ஏற்படும்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே அதிக வேலை கொடுக்காமல் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சரிசமமாகப் பயிற்சி எடுக்க வேண்டும்” என்கிறார்கள் சரும மருத்துவர்கள். How to Remove scars from body?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஸ்டஃப்டு குழிப் பணியாரம்

வேட்டி மட்டுமா இல்லன்னா…: அப்டேட் குமாரு

தீபாவளி போட்டியில் களமிறங்கும் புதிய படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *