சிவில் சர்வீஸ் (குடிமைப்பணி) தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி குறித்த அறிவிப்பை, தமிழக அரசு இன்று (அக்டோபர் 3) வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஆண்டுதோறும் குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்துவருகிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி மையங்களில் உணவு, தங்குமிடம், இலவச பயிற்சி ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி, எதிர்வரும் (2023) ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வின் இலவச பயிற்சி குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று (அக்டோபர் 3) வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023ஆம் ஆண்டில் மத்திய தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
அவ்வாறு, அவர்கள் விண்ணப்பிக்கும்பட்சத்தில் அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தகுதியுடைய நபர்கள் வரும் நவம்பர் 13ம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
இப்பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட்டு தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இன வாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
தீண்டாமை சுவர் இடிப்பு: முள்வேலியை அகற்றுவது எப்போது?
உளவுத் துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்!