வேறு மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேகாலயா மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவ பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக தமிழ்நாடு மற்றும் மேகாலயா சுகாதாரத் துறை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 29 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களாக மகப்பேறு மற்றும் சிசு இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான மருத்துவ பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த பயிற்சி திட்டத்தின் நிறைவு விழா சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேகலாய மாநில சுகாதாரத் துறை அமைச்சர், மருத்துவத்துறை ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்று விருது பெற உள்ள மருத்துவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த புரிந்துணர்வு திட்டம் அறிமுகமானது. இரு மாநிலங்களுக்கு இடையே செயல்படும் புரிந்துணர்வு இதுவே முதல் முறை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 29 மாணவர்கள் 6 மாதங்கள் பயிற்சி பெற்று வீடு திரும்பும் விடையளிப்பு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மற்ற மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பயிற்சி பெறுவது இதுவே முதல் முறை. மேகாலயாவில் மலைவாழ் மக்கள் சாதாரண சி.டி ஸ்கேன் எடுப்பதே பெரும் சிரமமாக இருக்கின்றது என அந்த மாநிலத்தின் மருத்துவத்துறை அமைச்சர் வருத்தமடைந்தார்.
ஆகையினால் நம் மாநிலத்தில் வட மாநிலத்தை சார்ந்த மக்களுக்கு உதவி அளிப்பது மிக பெருமையை அளிக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கின்றது.
உறுப்பு மாற்று தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தமிழகம் இந்தியாவிற்கு ஒரு முன் மாதிரியாக இருக்கிறது” என்று பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“தமிழ்நாடு இன்றைக்கு மருத்துவ கட்டமைப்பில் மிக சிறந்ததாக இருக்கின்றது. தமிழக முதலமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தினால் மிக சிறப்பாக இருக்கின்றது.
நம் மாநில மருத்துவர்களும் மேகாலயா மாநில அமைச்சர்களுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பெயரில் போர்கால அவசர சிகிச்சை, உயிர்காக்கும் மயக்கவியல் மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது இது தான் முதலாக இருக்கின்றது.
மற்ற மாநிலங்களை சார்ந்த மருத்துவர்களுக்கும் பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
முதன்மை கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்கள்: பட்டியலிட்ட முதல்வர்
’பிளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?’: புகாரும்… மறுப்பும்!
Ask Ma Su to make children of 10th std to get pass in tamil sb exam and then speak. Vaeyl vadai.