தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தமிழகம்

சேலத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோலை பயன்படுத்திய பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அந்த பங்கில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சேலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளுக்குச் செல்வதற்காக பொதுமக்கள் பலர் ஒரு பெட்ரோல் பங்கில் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பினர்.

ஆனால் போகிற வழியிலேயே அப்படிப்பட்ட வாகனங்கள் நின்றதால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில்  வாலிபர் ஒருவர் மெக்கானிக்கிடம் தன் வாகனத்தைச் சரி செய்ய கொண்டு சென்றார். வாகனத்தைப் பரிசோதித்த மெக்கானிக் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை சோதனையிட்டபோது அதில் தண்ணீர் கலந்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்குக்குச் சென்று தண்ணீர் கலந்த பெட்ரோலை எனக்கு நிரப்பியுள்ளீர்கள் என்று கூறினார். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும், அங்கிருந்து வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பங்க் ஊழியர்கள் சோதனை நடத்தியபோது மழை நீர் பெட்ரோலில் கலந்து இருப்பது தெரிந்தது. தொடர்ந்து அந்த பங்கில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

-ராஜ்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்!

கிச்சன் கீர்த்தனா – கருப்பட்டி அல்வா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.