லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் இன்று(டிசம்பர் 5) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும், அங்கித் திவாரி இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை துணை இயக்குநர் பிரிஜேஷ் பெனிவால் தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மோகனா அங்கித் திவாரிக்கு ஜாமீன் தர மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’அந்த 4,000 ஆயிரம் கோடி என்னாச்சு?’: எடப்பாடி குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் பதில்!
மிக்ஜாம் புயல்: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?