உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 பெண்களில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை சீகுர் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கள் மாரியம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றை கடந்து சென்றபோது தண்ணீர் குறைவாக ஓடியுள்ளது.
மதியத்திற்கு மேல் வனப்பகுதியில் கன மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கோவில் திருவிழாவில் பங்கேற்று விட்டு மாலை வீடு திரும்பிய ஜக்கலூரைச் சேர்ந்த சரோஜா, வாசுகி, சுசிலா, விமலா ஆகிய நான்கு பெண்கள் ஆற்றை கடக்க முயன்றபோது, வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.
இதனால் கோவிலில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கூடலூரில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு 1 மணி வரை தேடியும் அவர்களை தீயணைப்புத்துறையினரால் மீட்கமுடியவில்லை. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி முதல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வந்த நிலையில் மூன்று பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பக்தர்கள் நேற்று கோவிலில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களை இன்று காலை 7 மணி முதல் கயிறு மூலம் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட நான்கு பெண்களில் மூன்று பேரின் உடலை சடலமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், மீதமுள்ள ஒரு பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம்
ஏ.ஆர்.ரகுமானின் குறும்படம்: ரஜினி ரியாக்ஷன்!
கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?