கன மழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

தமிழகம்

கன மழை காரணமாக இன்று (டிசம்பர் 13) தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த பிறகும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கன மழை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்வம்

“உதயநிதி மக்கள் மத்தியில் சென்றடைந்து விட்டார்” – எ.வ.வேலு

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0