கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மாட வீதி முதல் மலை உச்சி வரை எங்கும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
கடந்த 27ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதனைக் காண வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,500க்கும் அதிகமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்துகள், ரயில்கள் மட்டுமின்றி கார், பைக் என திருவண்ணாமலைக்குச் சாரை சாரையாக மக்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.
திருவண்ணாமலை நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் அலையாகவே காட்சியளிக்கிறது. இன்று பிற்பகல் வரை மட்டும் 8 லட்சம் பேர் வந்திருப்பதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்குப் பெற்றோர்களுடன் வரும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்களது கையில் குழந்தையின் பெயர் அடங்கிய பட்டையை அணிவித்த பிறகே போலீசார் அனுமதிக்கின்றனர்.

இதனிடையே தீபம் பார்க்க வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மக்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அவரை, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் மீட்டு அழைத்துச் சென்றனர்.
பிரியா
நகைக்காக மூதாட்டி கொலை: பீரோவில் அடைத்த இளம்பெண்!
“3000 பள்ளிவாசல்கள், தேவாலயங்களை குறிவைத்திருக்கிறார்கள்” – ஜவாஹிருல்லா