ஏ.ஆர்.ரகுமானின் குறும்படம்: ரஜினி ரியாக்‌ஷன்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ஏ.ஆர்.ரகுமான் வெற்றிகரமான இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக செயல்பட்டு வருகிறார். இவர் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் 99 சாங்ஸ்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றி இருந்தார் ரகுமான். இதையடுத்து லே மஸ்க் என்கிற 36 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய குறும்படத்தை  இயக்கி உள்ளார். 

இப்படம் விர்ச்சுவல் ரியாலிட்டி என்கிற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தத்ரூபமான அனுபவத்தை உணர முடியும். இவ்வாறு அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இப்படத்தை முதன்முதலில் கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிட்டு பாராட்டுக்களை பெற்றார் ரகுமான்.

சமீபத்தில்  ரஜினிகாந்த்துக்கு இப்படத்தை திரையிட்டு இருந்தார் அது சம்பந்தமான புகைப்படங்களை அப்போது வெளியிட்டிருந்த ரகுமான் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி படம் பார்த்தபின் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில் படத்தை பார்த்து வியந்துபோன ரஜினி, வேறலெவல் சார் என சொல்லி ஏ.ஆர்.ரகுமானை கட்டிப்பிடித்து வாழ்த்தும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இராமானுஜம்

வேலைவாய்ப்பு : தபால் துறையில் பணி!

ரூ.2,000 நோட்டுகளை தடை செய்ய பாஜக மூத்த தலைவர் வலியுறுத்தல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts