இன்று (ஏப்ரல் 23) இரவு 7.3௦ மணிக்கு நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில், சென்னை-லக்னோ அணிகள் மோதுகின்றன.
கடந்த 19-ம் தேதி லக்னோவில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான போட்டியில், லக்னோ அணி வெற்றி பெற்றது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தநிலையில் மீண்டும் இன்று சென்னை அணி லக்னோ அணியை சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணியும், வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் லக்னோவும் திகழ்கின்றன.
இந்தநிலையில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. மேலும் அவர் லக்னோவில் தான் இருக்கிறார்.
இது சென்னை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. என்றாலும் அந்த அணியின் பிற பந்து வீச்சாளர்களையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
சேப்பாக்கத்தில் இதுவரை ஆடியுள்ள போட்டிகளில் சென்னை அணி வென்றுள்ளது. அதோடு மைதானத்தின் சாதக, பாதகங்கள் தெரியும் என்பதால் சென்னை இந்த ஆட்டத்தில் நிச்சயம் வெல்லும் என்று, ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எனவே ஆட்டத்தின் முடிவினை வழக்கம்போல நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Aadujeevitham: ஓடிடி ரிலீஸ் எப்போது?
Aparna Das: களைகட்டிய திருமணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!
Cook With Comali: இவங்க தான் அந்த ‘நியூ’ கோமாளிகள்… வீடியோ உள்ளே!