இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இந்நிலையில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் நாள் ஆட்டம் இன்று டொகினிகா நகரில் (ஜூலை 12) தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி இன்று நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானுக்கு விராட் கோலியும் அறிமுக டெஸ்ட் தொப்பியை வழங்கி கவுரவபடுத்தியுள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரம் அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் , ஜெயதேவ் உனத்கர் மற்றும் முகமது சிராஜ் ஆகிய பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கேட்ச்சை கோட்டைவிட்ட ஃபீல்டர்கள்: வைரல் வீடியோ!
டாஸ்மாக் திறக்கும் நேரம்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்!