வாய்ப்பு வழங்காத இந்தியா:அயர்லாந்து அணிக்கு போகிறாரா சஞ்சு சாம்சன்?

விளையாட்டு

சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்தவீரராக அறியப்படுபவர். ரசிகர்களிடம் அண்டர் 19கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே திறமையான வீரர் என்ற பெயரை பெற்று வருபவர்.

2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன், இந்த 7ஆண்டுகளில் வெறும்16 டி20போட்டிகள் மற்றும் 11ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறார்.

அந்த அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் பிசிசிஐ வாய்ப்பு வழங்காமல் இருக்கிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத பல வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்ல தொடங்கி விட்டனர்.

அண்டர் 19உலகக்கோப்பையை வென்ற உன்முகுத் சந்த், போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் அமெரிக்காவிற்காக விளையாட சென்றுவிட்டார்.

இதே போல் சீனியர் வீரரான உத்தப்பா இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாட்டில் விளையாட சென்றுவிட்டார்.

sanju samson Ireland cricket snubbed india selectors gets offer

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரை இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுமாறு அண்மையில் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

அயர்லாந்து நாட்டு குடியுரிமை, கார் மற்றும் வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட்டிற்கு நிகராக வழங்கப்படும் ஊதியம் என அனைத்தையும் வழங்குகிறோம்.

எங்கள் நாட்டிற்கு வந்து அயர்லாந்து அணிக்காக விளையாடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

sanju samson Ireland cricket snubbed india selectors gets offer

ஆனால், சஞ்சு சாம்சன் நாட்டின் மீது உள்ள பற்றால், இந்த வாய்ப்ப வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன். பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு டி20லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார்.

சஞ்சு சாம்சனின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சர்ச்சையான ஆர்யா பட டைட்டில்!

கான்வாயில் தொங்கிய மேயர்: விளாசிய அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
2
+1
0