நடிகை அபர்ணா தாஸின் திருமணம் தற்போது களைகட்டியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பீஸ்ட் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அபர்ணா தாஸ் தொடர்ந்து கவினுடன் இணைந்து டாடா படத்தில் நடித்தார்.
இப்படம் வசூலைக் குவித்ததுடன் அபர்ணாவிற்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. இதனால் அடுத்தடுத்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அபர்ணா தாஸ் தற்போது திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
மனோகரம் படத்தில் மஞ்சுமோல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்போல் உடன் இணைந்து நடித்தபோது உருவான காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. நாளை (ஏப்ரல் 24) தீபக் – அபர்ணா திருமணம் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி இருவரும் திருமணத்திற்கு முன்பான ஹல்தி பங்க்ஷனை கொண்டாடி இருக்கின்றனர். உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் சேர்ந்து இந்த விழாவை இருவரும் கொண்டாடி மகிழ்ந்து உள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது காங்கிரஸ் : மோடி
Cook With Comali: இவங்க தான் அந்த ‘நியூ’ கோமாளிகள்… வீடியோ உள்ளே!
Ghilli: ரீ-ரிலீஸிலும் சாதனை… 3 நாட்களில் இத்தனை கோடியா?