காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படம் எல்.ஐ.சி. கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
எல்.ஐ.சி படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் தயாரிக்கும் நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்ற முடிந்தது.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் நயன்தாராவின் அப்பா கதாபாத்திரத்தில் சீமான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும், சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும் நயன்தாராவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதால் இந்த ப்ராஜெக்டில் இருந்து அவர் விலகிக் கொண்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உண்மையா வதந்தியா என்று தெளிவாக தெரியவில்லை.
ஏற்கனவே அஜித் படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு அந்த பட வாய்ப்பு கை நழுவி போனது. அதனைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது எல்.ஐ.சி படத்தை இயக்க தயாரானார் விக்னேஷ் சிவன்.
ஆனால் எல்.ஐ.சி என்று டைட்டில் வைத்ததற்காக இந்த படத்தின் மீது வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தற்போது இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகிக் கொண்டார் என பரவும் இந்த தகவல் எல்ஐசி பட குழுவினருக்கு புது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
பிரித்விராஜ் உடன் மலையாள திரையுலகில் கால் பதிக்கும் யோகி பாபு
’என் வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ…’ : யுவராஜ் சிங் ஆசை நிறைவேறுமா?
ரிப்பீட் சூப்பர் ஓவரில் இந்தியா ’த்ரில்’ வெற்றி பெற்றது எப்படி? : ரோகித் விளக்கம்!
ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்!