Suvadantriya Veer Savarkar Movie

சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு படம்… ரிலீஸ் தேதி இதோ!

சினிமா

வலதுசாரி கொள்கையாளர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு “சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர்” என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரந்தீப் ஹூடா சாவர்க்கர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மட்டுமின்றி படத்தையும் இயக்கியுள்ளார்.

ஆனந்த் பண்டித் மோஷன் பிக்சர்ஸ், ரந்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், லெஜண்ட் ஸ்டுடியோஸ், ஆவக் ஃபிலிம்ஸ் (Avak Films) ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது.

கடந்தாண்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏதோ சில காரணத்தினால் இந்த படத்தின் வெளியீடு தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவதந்த்ரிய வீர் சாவர்க்கர் படம் வரும் மார்ச் 22 ஆம் தேதி ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ரந்தீப் ஹூடா, “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் இரு நாயகர்கள்; அவர்களில் ஒருவர் கொண்டாடப்பட்டார், மற்றொருவர் வரலாற்றில் இருந்து நீக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு தியாகிகள் தினத்தன்று வரலாறு திரும்பி எழுதப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… வீட்டிலேயே வெந்தய பேக்!

கிச்சன் கீர்த்தனா: ஸ்பைசி பொட்டேடோ பாஸ்தா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

1 thought on “சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு படம்… ரிலீஸ் தேதி இதோ!

  1. அந்த படத்துல மகாத்மா காந்தி தூக்கு போட்டு தற்கொலை செஞ்சுகிட்ட சீன் இருக்குல்ல..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *