இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு‘ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று (மார்ச் 13) காலை 5.30 மணிக்கு தொடங்கிய இவ்விழாவின் நேரலை காட்சிகள் Disney+Hotstar -ல் ஒளிபரப்பாகி வருகிறது.
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியானது.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்த நிலையில், இன்று (மார்ச் 13 ) சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
கீரவாணி இசையில், சந்திரபோஸ் வரிகளில் உருவான ’ நாட்டு நாட்டு ’பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இவ்விருதினை பெற்றுள்ளது.
தற்போது இதனை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது.
இதனை அடுத்து நடைபெற்ற கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாகை கடலில் கச்சா எண்ணெய்: ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை!
ஆன்லைன் ரம்மி அரசியல்: ஆட்சிக்கு இடையூறாகும் ஆளுநர்