தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று (மே 11) பதவியேற்றார்.
தி.மு.க. பொருளாளர் டி.ஆர் பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவி ஏற்பார் என்று மே 9ஆம் தேதி ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டது.
அதன்படி இன்று காலை 10.35 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இருக்கும் தர்பார் அரங்கில் டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவுக்காக காலை 9.30 மணி முதலே அனைத்து அமைச்சர்களும் வந்திருந்தனர். டி.ஆர்.பி.ராஜா தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். 10.20 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்.
அதைத்தொடர்ந்து சரியாக 10.35 மணிக்கு டி.ஆர்.பி.ராஜாவுக்கு, பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் ஆளுநர் செய்து வைத்தார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிகரிக்கும் இளைஞர் படை!
நிலக்கரி சுரங்கம்: தமிழ்நாடு அதிகாரப்பூர்வமாக நீக்கம்!