தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் (மே 11) மாற்றப்படவுள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக முதலில் நமது மின்னம்பலத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி அமைச்சரவை மாற்றம் உறுதியாகியுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறைச் செயலர் ஜெகநாதன் ஐஏஎஸ் அமைச்சரவை மாற்றம் குறித்து ராஜ்பவனில் கடிதம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆளுநரின் முதன்மை செயலாளர் இன்று இரவு 9 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பதவி ஏற்பு நிகழ்ச்சி வரும் மே 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறும்.
அதுபோன்று முதல்வரின் பரிந்துரையை ஏற்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் அப்பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா