டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அரசியல்

தேர்தல் பிரச்சாரம்!

திமுக தலைவர் ஸ்டாலின் – ஈரோடு, நாமக்கல், கரூர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

பாஜக தலைவர் அண்ணாமலை – கரூர்

பாமக தலைவர் அன்புமணி – தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – சிவகங்கை, மதுரை

இந்தியா கூட்டணி பேரணி!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இன்று (மார்ச் 31) இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.

ஈஸ்டர் பண்டிகை!

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

ரூ.1,823 கோடி அபராதம் செலுத்தக்கோரி காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சிறப்பு ரயில் இயக்கம்!

பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை – கோவை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று 14-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விழிப்புணர்வு மாரத்தான்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

குஜராத், ஹைதராபாத் மோதல்!

இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத், ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

டென்னிஸ் போட்டி!

இன்று நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெனில்லா கொல்லின்ஸ் மற்றும் ரஷ்யாவின் எலினா ரைபாக்கினா மோதுகின்றனர்.

வானிலை நிலவரம்!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… பனீர் சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

LSGvsPBKS : மாற்றப்பட்ட கேப்டன்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *