100 நிமிடங்கள் தொடர்ந்து பிரபுதேவா பாடல்களுக்கு நடனமாடி நடனக் கலைஞர்கள் இன்று (மே 2) உலக சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளர் பிரபுதேவா தேர்ந்தெடுத்த 100 பாடல்களுக்கு பெரியவர்கள், குழந்தைகள் என 5,000 பேர் 100 நிமிடங்கள் தொடர்ந்து நடனம் ஆடி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று உலக சாதனை படைத்தனர்.
இந்நிகழ்ச்சியை ராபர்ட் மாஸ்டர் அவரது குழுவினருடன் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபுதேவா கலந்து கொள்வதாக இருந்தது. பிரபுதேவாவை காண பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் குவிந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் பிரபு தேவா சிறப்பு விருந்தினராக வரவிருந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக வரமுடியாமல் போனது.
இதனால் நடனக் கலைஞர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள் பல மணிநேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சிலர் மயங்கி விழுந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரபு தேவா வீடியோ கால் மூலம் வந்து வரமுடியாததற்கான காரணத்தை விளக்கி, வருத்தம் தெரிவித்த பின்னர் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து, ராஜரத்தினம் மைதானத்தில் இருந்த 5000 நடனக்கலைஞர்களும் பிரபுதேவா தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு 100 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி உலகசாதனை படைத்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இட ஒதுக்கீடு… மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது: ராகுல்