பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு பறந்தது எப்படி? வெளியுறவுத்துறை புது விளக்கம்!

Published On:

| By indhu

Prajwal not granted permission to travel abroad - External Affairs

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்நாடக மாநிலம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின்  ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் வெளிநாடு செல்ல உரிய அனுமதி பெறவில்லை என இன்று (மே 2) வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவின்  ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் ஏற்படுத்தியது.

குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி நாட்டுக்கு சென்றுவிட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பல நூறு பெண்களை சீரழித்த பிரஜ்வல் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி எல்லாம் தெரிந்தும் பிரதமர் மோடி அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தது எப்படி? இப்போது பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது எப்படி என ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், இன்று (மே 2)  செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் வெளிநாடு செல்ல வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை.

ராஜாங்க பாஸ்போர்ட் பிரஜ்வல் வைத்துள்ளதால் அவர் ஜெர்மனி சென்றதற்கு விசா தேவையில்லை. மேலும் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல விசா குறிப்பு எதையும் அமைச்சகம் வழங்கவில்லை.

அவர் ராஜாங்க பாஸ்போர்ட்டின் மூலம் பயணம் செய்கிறார். பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க இதுவரை எந்த நீதிமன்றமும் வெளியுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை” என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போலீஸ் ஸ்டிக்கருடன் வந்த கன்டெய்னரில் ரூ. 2000 கோடி : யாருக்குச் சொந்தமானது?

பூதாகரமாகும் இசையா? மொழியா? : மொரிஷியஸில் ஜில் செய்த இளையராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel